Tuesday, 26 March 2013

வெள்ளயங்கிரி - தென்கயிலாயம் - Mar 2013

வெள்ளயங்கிரி - தென்கயிலாயம்
பயண நாள் : 23-03-2013

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் உள்ள உயரமான மலைகளில் 10வது இடத்தில் உள்ளது.

Following is a list of some of the highest peaks of the Western Ghats:
RankNameElevation (m)Location
01.Anamudi2695Idukki, Kerala
02.Meesapulimala2640Idukki, Kerala
03.Doddabetta2637Nilgiris, Tamil Nadu
04.Kolaribetta2629Mukurthi National Park, Tamil Nadu
05.Mukurthi2554Mukurthi National Park, Tamil Nadu
06.Vandaravu Peak2553Palani Hills Wildlife Sanctuary and National Park, Tamil Nadu
07.Kattumalai2552 Eravikulam National Park, Kerala
08.Anginda peak2383Silent Valley National Park, Kerala
09.Vavul Mala2339 Vellarimala, Kerala
10.Velliangiri Peak2240 Coimbatore, Tamil Nadu,[13]
11.Kodaikanal2133Kodaikanal, Tamil Nadu
12.Chembra Peak2100Wayanad, Kerala
13.Elivai Malai2088 Palakkad, Kerala
14.Banasura Peak2073Wayanad, Kerala
15.Kottamalai2019Periyar National Park, Kerala

வெள்ளயங்கிரி ஒரு விறுவிறுப்பான, ஆபத்தான மற்றும் மிகவும் அற்புதமான மலையேற்றம்இது எங்கள் வாழ்க்கையில் மிகவும் தைரியமான பயணமாக அமைந்தது.

வெள்ளயங்கிரி மலை அடிவாரம் பூண்டி, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

மொத்தம் 7 மலைகளை கொண்ட ஒரு அற்புதமான பயணம்


வது மற்றும் 2 வது மலைகள் - பாறைகளை பயன்படுத்தி செய்யப்பட்ட படிகள், உத்தேசமாக - 4000 + படிகள், உங்கள் பொறுமையை சோதிக்கும். மிகவும்செங்குத்தானதாகவும் அது உங்கள் முழங்கால்களுக்கு சவாலாகவும் அமைகிறது. அதிர்ஷ்டவசமாக கல் படிகள்உள்ளன எனவே மலையேறுவது ஆபத்தானதாக இல்லை (கரடுமுரடானது என்றாலும்)

3 வது மலை - ஒரு வழுக்கும் பாறை சிறிய படிகளுடன் இருக்கும் மற்றும் பாறைகளுடன் கூடிய படிகளையும் காணலாம்
 
4,5 ம் மலை - ஒரு கடின இலக்கு, வெறும் பாறைகளுடன் கூடிய படிகள்.... இரு புறமும் மரங்கள் இருப்பது ஒரு ஆறுதல்...
 
6 வது மலை - மிக மிக கடின பாதைகள், மலை மேலே ஏறி கிழே இறங்கும். எந்த மரங்களும் இல்லாத ஒரு திறந்தவெளி பாதையாக இருக்கும். இங்கிருந்து நாம் 7வது மலையில் உள்ள குகையை பார்க்க முடியும்.

7 வது மலை - செங்குததாக மேலே ஏறும்.  பார்பதற்க்கு 30 நிமிடத்தில் ஏறி விடலாம் என எண்ணம் வரும் ஆனால் 70-90 நிமிடம் வரை ஆகும். எந்த மரங்களும் இல்லாத பாதை, மண் நிறைய இருக்கும் எனவே ஏறுவதற்க்கு சற்று சிரமமாக இருக்கும்.







சென்னையிலிருந்து துரந்தோ இரயிலில் நாங்கள் 11 பேர் கொண்ட குழு கோவையை சென்றைடையும் போது மணி சரியாக பகல் 2:30

 புத்துணர்ச்சியுடன் எங்கள் குழு...  பூண்டிமலை அடிவாரம், சரியாக மணி இரவு 9:30.

 
முதல் மலை சவாலான படிகள்


எங்கள் சக்தி பாதி மங்கிவிட்டது



பாதி தூக்கத்தில்.... மூன்றாவது மலை சரியாக மணி நல்லிரவு 01.00 
பூச்சியுடன் தூக்கம்....திரு. செந்தில்குமார்
ஆறாவது மலை சரியாக மணி அதிகாலை 04.00
 
சூர்யோதயம் - சரியாக மணி காலை 6:10
 
தென்கயிலாயம் (பூலோகசொர்க்கம்)
முழு சக்தியுடன் எங்கள் குழு தலைவர் திரு. ஆனந்தகுமார்.
Man of the energy திரு. பன்னீர்செல்வம் மற்றும் திரு. பழனி
 
இறங்க ஆரம்பித்தோம், மணி சரியாக காலை 8:00 இருக்கும்.
ஆறாவது மலையில் இருந்து 7வது மலையின் ரம்மியமான காட்சி....
இவ்வளவு கடின பாறைகளையா கடந்து சென்றோம்???
வழுக்கு பாறை - 3வது மலை
 
 

1 comment: